Posts

ஜீவதயவே ஞானவீட்டின் திறவுகோல்

Image
ஓங்காரக்குடில் Ongarakudil ஆசான் வள்ளலாரின் அருள்நிறை வாக்கு "ஜீவதயவே ஞானவீட்டின் திறவுகோல்". அன்பின் முதிர்ச்சிதான் ஞானமாக மாறும். ஆகவே எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டுங்கள். இதுதான் ஞானத்தின் வழிகோல் என்கிறார் ஓங்காரக்குடிலாசன் சிவராஜயோகி, பரமானந்த, சதாசிவ சற்குரு தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள். ஒருவன் கடவுள்தன்மை அடையவேண்டுமாயின் அவரைச் சார்ந்தவர்கள் மனம் பதறும்படியாகவோ, அஞ்சும்படியாக நடக்கக்கூடாது. ஒரு குடும்பத்தில் கணவன் வெளியில் சென்றால் மன ைவி எப்போது திரும்பி வருவார் என நினைக்க வேண்டும். பிள்ளைகள் தகப்பனை ஆவலுடன் எதிர்பார்க்க வேண்டும். அதைவிடுத்து மனைவி, பிள்ளைகள் பாவி வந்திட்டான் என்று நினைத்தால் நிச்சயம் அவன் வாழ்வில் முன்னேற்றம் கிடையாது. ஆகவே பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகள் மனம் மகிழும்படி நடந்து கொள்ளவேண்டும். மனைவியும் குடும்பத்திலுள்ளோர் மனஅமைதி கெடும்படி நடக்ககூடாது. நம்மைச் சார்ந்தவர்களிடம் முதலில் அன்பு செலுத்தவேண்டும். வீட்டிலுள்ளோர் மனம் மகிழும்படி நடந்துகொள்ளாமல், வெளியே தேனொழுக் பேசி எந்தப் பயனுமில்லை என்கிறார் ஆசான். நீங்கள் அன்பு செ

மனிதனும் கடவுள் ஆகலாம்...

Image
மனிதனும் கடவுள் ஆகலாம். கடவுளுடன் இரண்டறக் கலக்கலாம். சித்தர்கள் The Ascended Masters மனிதனும் கடவுள் ஆகலாம் -ஆசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள் அருளிய உபதேசம் ஆன்மீகத்தின் படிகள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பார்கள்.  மனிதன் கடவுளாக வேண்டுமென்றால் சரியை, கிரியை, யோக, ஞானம் ஆகிய நான்கும் அவன் அறிந்திருக்க வேண்டும். இதை அறியாமல் ஆன்ம லாபம் பெற முடியாது.  சரியை என்பது பிற உயிர்களுக்கு நன்மை செய்தலும், நன்நெறியை கடைபிடித்து நடப்பதும், ஜீவகாருண்யமுமே சரியையின் முதல் படியாகும்.  சரியை என்பது இனிமையாக நடந்து கொள்ளல்; பொய் சொல்லாது இருத்தல்; நீதிக்கு உட்பட்டு பொருள் சேர்த்தல்; சிறு தெய்வ வழிபாட்டில் ஈடுபடாது இருத்தல்; புலால் உண்ணாது இருத்தல்; உயிர்க்கொலை செய்யாது இருத்தல்; இதெல்லாம் சரியை மார்க்கம். பண்புள்ளவனாக வாழ். சமுதாயத்தில் பண்புள்ளவன்;உயர்ந்தவன்; புண்ணியவான் என்று பெயரெடுப்பது சரியை மார்க்கம். கிரியை என்பது கடவுள் ஒருவன் உண்டு என்று அறிவதும், அதற்கு துணையாக இருப்பது உருவ வழிபாடாகும். ஆரம்பகாலத்தில் ஒரு உருவத்தை சுட்டிக்காட்டினால்தான் அதை பூஜித்து கடவுள் அருள் பெறுவ

இயற்கை சீற்றங்களிலிருந்து காத்துக்கொள்ள...

Image
சித்தர்கள் The Ascended Masters அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்.... இயற்கை சீற்றங்கள் வரத்தான் செய்யும், அப்படி இயற்கை சீற்றங்கள் வந்தாலும் அகத்தீசனை வணங்குகின்றோரெல்லாம் இயற்கை சீற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள் என்பதை அறியலாம். முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்.... வறுமையற்ற வாழ்வும், கவலையற்ற வாழ்வும், விஷஜந்துகளால், விபத்தினால், இயற்கை சீற்றங்களினால், முன்ஜென்ம பாவங்களினால், மரண கண்டங்களால் ஏற்படும் ஆபத்துகள் ஏதும் அணுகாத அமைதியான வாழ்வை வாழலாம். மனஅமைதியுடன் கூடிய ஆரோக்கியமும் நீடிய ஆயுளைப் பெறலாம். மனக்குழப்பத்திற்கும், மனஅழுத்தத்திற்கும் மருந்து முருகனின் நாமங்களே என்பதையும் அறியலாம். மனஅழுத்தமும்,மனக்குழப்பமும ், முன்ஜென்ம பாவங்களினால்தான் வருகின்றதனால் பயிற்சிகளை செய்வதின் மூலம் ஒருபோதும் மனக்குழப்பத்திலிருந்து விடுபட முடியாது, மனஅழுத்தமும் தீராது. ஜென்ம ஜென்மமாய் செய்த பாவத்தை பொடிப் பொடியாக்கும் முருகப்பெருமான் திருவடி கருணையால் தான் பாவங்கள் நீங்கும், பாவவினைகள் நீங்கினால் மனக்குழப்பமும் மனஅழுத்தமும் தானே நீங்கும், பிரச்சனைகளு

சந்திரகலை, சூரியகலை, சுழிமுனை

Image
பாசம் எனப்படுகின்ற சந்திரகலை (இடது நாசியில் வருகின்ற மூச்சுக்காற்று). இது உடல்சார்ந்த ஒரு மூச்சுக்காற்று இயக்கமாகும். இது உடம்பை பேணும். பசுவாகிய சூரியக்கலை (வலது நாசியில் வருகின்ற மூச்சுக்காற்று). இது உயிரைச்சாரும். அதாவது ஆன்மாவை சார்ந்து இயங்கக்கூடிய மூச்சுக்காற்று இயக்கமாகும். பதியாகிய சுழிமுனை (இடது, வலது, நாசித்துவாரங்களுக்கு மேலாக இரு கண்ணிற்கு மையமாக கபாலத்தின் உட்புறத்தே நாசித்துவாரங்களும ், கண் துவாரங்களும், காது துவாரங்களும், மூளைத்துவாரமும் ஒன்று கூடக்கூடிய புறத்தே புருவத்தின் மத்திக்கு, நேராக கபாலத்தின் மையத்திலே இடது வலது நாசித்துவாரங்களுக்கு மேலாக ஒரு மெல்லிய சவ்வினால் பிரிக்கப்பட்டு சாதாரணமாய் இணைப்புடன் இல்லாமல் தனித்து பிரிந்து உள்ளதும் ஒரு மெல்லிய மயிரிழை போன்ற நாடியாகி கண்ணுக்கும், வேறெந்த கருவிகளுக்கும் புலப்படாமல் உள்ள ஒரு அற்புத இயற்கையின் வரப்பிரசாதமான நாடியாகும். இதுவே பிரம்மநாடி. இதுவே ஈஸ்வர நாடி. இதுவே மரணமில்லாப் பெருவாழ்வை தரவல்ல நாடியாகும். பதி என்று சொல்லப்படுகின்ற சுழிமுனை நாடியானது பரமான்மாவைச் சார்ந்து இயங்குகின்ற நாடியாகும். இதன் இயக்கமே இறைநிலையை ந