ஜீவதயவே ஞானவீட்டின் திறவுகோல்


ஓங்காரக்குடில் Ongarakudil

ஆசான் வள்ளலாரின் அருள்நிறை வாக்கு "ஜீவதயவே ஞானவீட்டின் திறவுகோல்". அன்பின் முதிர்ச்சிதான் ஞானமாக மாறும். ஆகவே எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டுங்கள். இதுதான் ஞானத்தின் வழிகோல் என்கிறார் ஓங்காரக்குடிலாசன் சிவராஜயோகி, பரமானந்த, சதாசிவ சற்குரு தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்.

ஒருவன் கடவுள்தன்மை அடையவேண்டுமாயின் அவரைச் சார்ந்தவர்கள் மனம் பதறும்படியாகவோ, அஞ்சும்படியாக நடக்கக்கூடாது. ஒரு குடும்பத்தில் கணவன் வெளியில் சென்றால் மனைவி எப்போது திரும்பி வருவார் என நினைக்க வேண்டும். பிள்ளைகள் தகப்பனை ஆவலுடன் எதிர்பார்க்க வேண்டும். அதைவிடுத்து மனைவி, பிள்ளைகள் பாவி வந்திட்டான் என்று நினைத்தால் நிச்சயம் அவன் வாழ்வில் முன்னேற்றம் கிடையாது. ஆகவே பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகள் மனம் மகிழும்படி நடந்து கொள்ளவேண்டும். மனைவியும் குடும்பத்திலுள்ளோர் மனஅமைதி கெடும்படி நடக்ககூடாது.

நம்மைச் சார்ந்தவர்களிடம் முதலில் அன்பு செலுத்தவேண்டும். வீட்டிலுள்ளோர் மனம் மகிழும்படி நடந்துகொள்ளாமல், வெளியே தேனொழுக் பேசி எந்தப் பயனுமில்லை என்கிறார் ஆசான். நீங்கள் அன்பு செலுத்தியும் அவர்கள் உங்களை வெறுத்தால் பூசை செய்யும்போது ஞானிகளிடம் "என்னை கொடுமைக்காரன் என்று சொல்லாத அளவிற்கு அல்லது மற்றவர்கள் மனம் மகிழும்படி நான் நடந்து கொள்ள வேண்டும்" என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.

ஆசான் மேலும் சொல்கிறார் பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் கடவுளால் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதம். அவர்கள் இதயத்தில் நம்மீது கசப்புணர்ச்சி இருக்ககூடாது. யாராக இருந்தாலும் நம்மை வாழ்த்த வேண்டுமேயன்றி தூற்றக்கூடாது.
https://www.facebook.com/groups/ongarakudil




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 
bbb3


Comments

Popular posts from this blog

சந்திரகலை, சூரியகலை, சுழிமுனை

மனிதனும் கடவுள் ஆகலாம்...